Categories
மாநில செய்திகள்

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் நன்றி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர்  மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிக்கு தேவையற்ற முறையில் மருந்து கேட்டு சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று நாள் ஒன்றுக்கு 20,000 மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |