Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி ….வாரச்சந்தை அமைத்த வியாபாரிகள்…. எச்சரித்து அனுப்பிய போலீசார் …!!!

திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ,வாரச்சந்தை அமைத்த வியாபாரிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்றை  கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வார முழு ஊரடங்கு  தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஊரடங்கில்  காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் ,காய்கறி கடைகள் உட்பட அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கும் என்றும் மற்ற வாரச்சந்தை எதுவும் செயல்படாது என்று அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம்  திருப்பாச்சூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி, நேற்று  30 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ,வாரச் சந்தைகளை அமைத்து காய்கறி விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டன. இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டரான  சீனிவாசன் மற்றும் அவருடன் போலீசார் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், கடைகளை காலி செய்யுமாறு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |