Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய வழக்கு…. வங்கி கணக்கை முடக்கிய காவல்துறையினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் ரெம்டெசிவிர் மருந்தை கடத்தியவரின் வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கம் செய்துள்ளனர்.

கோவில்பட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை அதிகமான விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தனர். அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு மட்டுமில்லாமல் தீவிர விசாரணையும் மேற்கொண்டதில் நெல்லையிலிருக்கும் மருந்து வியாபாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நெல்லை சந்திப்பிலிருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பெருமாள்புரத்தில் வசித்து வந்த பிரவீன் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 4 ரெம்டெசிவிர் மருந்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்வது தொடர்பாக நடந்த பண பரிவர்த்தனையை விசாரணை செய்ய பிரவீனுடைய வங்கிக் கணக்கை காவல்துறையினர் முடக்கினர்.

Categories

Tech |