நெல்லையில் கொரோனா தொற்றால் மனைவி உயிரிழந்ததால் கணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் சாலைகண் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற சாலைகண் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலை பயன்படுத்திக்கொண்டு வெள்ளியை உருகுவதற்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை தண்ணீருடன் கலந்து குடித்ததால் மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சாலைகண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.