Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: தமிழகத்தில் இன்று முதல்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கில் மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்ய இன்று முதல் இ பாஸ் தேவை கிடையாது. இ பதிவு மட்டும் போதும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் வேண்டும். இ பதிவில் இணையத்தில் பதிவு செய்து அந்த ஆவணம் இருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் தேவையில்லை என கூறியுள்ளது.

Categories

Tech |