நாடு முழுவதும் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கட்டத்தில் வெளியிடப்படும் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,777 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தனி நபர் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். அதனால் தங்க பத்திரம் வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். அதற்கான தள்ளுபடி உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.
Categories