தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசு விற்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் நாளை முதல் ரெம்டேசிவிர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விற்பனை நிறுத்தப்பட்டதால் மருந்து வாங்க யாரும் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.