Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் .

அதன்பின் காவல்துறையினர் மாதவியிடம்  நடத்திய விசாரணையில் கீழநத்தம் பகுதியில் வசிக்கும் தேவகி என்ற மற்றோரு பெண்ணும் மது விற்பனையில் ஈடுபட்டது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாதவியும், தேவகியும் கைது செய்துயுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |