இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பரமத்தி பகுதியில் ரங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தர்ஷனா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு பால் சொசைட்டியில் பாலை ஊட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனியப்பன் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி தர்ஷனா வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதன்பின் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரான பாலசுப்பிரமணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தர்ஷணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்