Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பா மீண்டும் வாடா…. நம்ப முடியாமல் தவிக்கிறேன் – மனதை கனக்க செய்யும் வரிகள்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலாம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் விஜய் சேதுபதிக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவார். இவருடைய இறப்பு தமிழ் சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருடைய மறைவிற்கு காளி வெங்கட் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சினிமா மீதான ஆவலும் அங்கலாய்ப்பும் உன்னைப்போல் ஒருவனிடம் கண்டதில்லை. வருவாய் மீண்டும் உன்னை கேலி செய்ய வேண்டும் என நானும், கார்த்தியும் காத்திருக்கிறோம். நம்பவே முடியவில்லை. மனம் கனக்கிறது நண்பா” என  மனவேதனையை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |