Categories
தேசிய செய்திகள்

இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதி தீவிர புயலாக மாறியுள்ளடவ்தே புயல் குஜராத்தில் போர்பந்தர்- மதுவா இடையே இன்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கேரளா, கோவா, குஜராத்தில் கனமழை பெய்யும். கடலில் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |