Categories
தேசிய செய்திகள்

டவ்தே புயல் எதிரொலி…. காலை 11 முதல் மதியம் 2 வரை…. மும்பை விமான நிலையம் மூடல்…!!!

டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதி தீவிர புயலாக மாறியுள்ளடவ்தே புயல் குஜராத்தில் போர்பந்தர்- மதுவா இடையே இன்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் கேரளா, கோவா, குஜராத்தில் கனமழை பெய்யும். கடலில் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக மும்பை விமான நிலையம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |