Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பற்றி எறிந்த கொட்டகை”கருகிய நிலையில் 32 கால்நடைகள்… ஊர்மக்கள் கண்ணீர் மல்க வேதனை..!!

கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

Image result for கொட்டகைக்கு தீ வைப்பு

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில் விரைந்து வந்த விருதாச்சலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கால்நடைகள் கருகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்ட கொளஞ்சியும் அவரது மனைவியும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் மாட்டு கொட்டகைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |