திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,891 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கொரோனாவிலிருந்து 443 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு 2,342 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.