சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி கொரோனா நிவாரண தொகையை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணமங்கலம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிவாரண தொகையை மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்க அலுவலர் பாலகிருஷ்ணன், இளையான்குடி தாசில்தார் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய பேரூர் செயலர்கள் பொன்னுச்சாமி, நஜிமுதீன், தமிழ்மாறன், ஆறு.செல்வராசன், வெங்கட்ராமன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட பிரதிநிதி இப்ரஹிம், சையது கான், சத்தியயேந்திரன், சண்முகம், கணேஷ், சேதுராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மானாமதுரை தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி சுப.அன்பரசன் என பலரும் கலந்து கொண்டனர்.