தேனியில் ஊரடங்கை மீறியதாக 300 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித் திரிவதால் உத்தமபாளையம் காவல்துறையினர் அவர்களுடைய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு வீதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த 300 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.