Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்திய மக்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு… Lets Try….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளும், புதிதாக கண்டறியப்பட்ட தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை தடுக்க தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG (2 டியோக்ஸி டி குளுக்கோஸ்) பவுடர் மருந்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2DGபவுடர் மருந்தை ஒரு முறை தண்ணீருடன் கலந்து அருந்தினால் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும். உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. மத்திய அரசின் டிஆர்டிஓ மற்றும் டாக்டர் டென்னிஸ் லேபரட்டரிஸ் இணைந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது. இவை அனைத்தும் பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளது. அதனால் அவசரத் தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |