Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டவ்-தே புயல்… திடீரென கடல் உள்வாங்கியது… தரை தட்டிய படகுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்- தே புயலால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோட்டைப்பட்டினம் பகுதியில் அதிக அளவில் திடீரென கடல் உள்வாங்கியதால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டின.  இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |