Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு…. வெறிசோடி காணப்பட்ட சாலைகள்…. எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள்….!!

வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப் படவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட மளிகை கடை, இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் வேலூர் மாநகராட்சியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் சாலைகளில் சென்றுள்ளனர். இதனால் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் பொதுமக்களை வீட்டிற்கு செல்லும்படி எச்சரித்துள்ளனர். மேலும் வேலூர் மாநகராட்சியின் பல்வேறு முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

Categories

Tech |