சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆல்பம் பாடல்கள் மற்றும் சில குறும்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பவித்ரா ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் ‘உங்களுடைய அடுத்த பிளான் என்ன ?, உங்களது படங்களை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்’ என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பவித்ரா ‘ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு இருமொழி படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் மேலும் சில படங்களின் அறிவிப்பு வெளியாகும்’ என கூறியுள்ளார்.