Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே கொட்டிய பெயிண்ட்… வலியில் அலறி துடித்த தொழிலாளி… சென்னையில் நடந்த சோகம்…!!

பெயிண்ட்டை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது உடலில் தீ பிடித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிப்லாப் பத்ரா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிப்லாப் பத்ரா எதிர்பாராத விதமாக பெயிண்ட்டை கீழே கொட்டி விட்டதால் அதன்மீது தின்னரை ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து பெயிண்ட்டை முழுமையாக நீக்குவதற்காக ஒரு இரும்பு தகடால் தரையை சுரண்டிக் கொண்டிருந்த போது, திடீரென அதிலிருந்து வந்த தீப்பொறி அவரின் ஆடை மீது பட்டது.

அதன் பின் தீயானது அவரது உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் பிப்லாப் பத்ரா அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து அவரின் உடலில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதன்பின் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் பிப்லாப் பத்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |