பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார்.
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா 1975,1980, மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் பதவி காலத்தில் இருந்த பொழுது மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டது.
இதனிடையே 82 வயதான ஜெகநாத் மிஸ்ரா புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிர் பிரிந்தது. ஜெகநாத் மிஸ்ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.