Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக …. விராட் கோலி திகழ்கிறார்-புகழ்ந்து தள்ளிய டிம் பெய்ன்…!!!

உலகின்  மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திகழ்கிறார், என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாராட்டிப் பேசியுள்ளார்.

கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த, விராட்கோலி தலைமையிலான டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ,இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து 2020 – 21 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடந்த போட்டியிலும், ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது . இந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக      டிம் பெய்ன் தலைமை தாங்கினார். இவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு  அளித்த பேட்டியில் பேசும் போது, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை,  பாராட்டிப் பேசியுள்ளார்.

அவர் கூறும்போது, விராட் கோலி வித்யாசமான ஒரு வீரர் என்று பலமுறை நான் கூறி இருக்கிறேன். விராட் கோலியை போன்று ஒரு வீரர் தங்கள் அணியிலும் இடம் பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அவர் களத்தில் இறங்கும்போது கடுமையான போட்டி அளிக்கக் கூடியவர். இதனால்தான் அவர் உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கூலி விளங்குகிறார் என்று அவர் புகழ்ந்து கூறியுள்ளார். எங்களுக்கு எதிராக ஆடுவதை  சவாலாக எடுத்துக்கொண்டு, களத்தில் சிறப்பாக செயல்படுவார். குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த தொடரில், எனக்கும் விராட் கோலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதைக் என்னால் மறக்க முடியாது. என்றும் அதை ‘எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’ என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |