Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக… 2-ஆவது முறையாக தொடங்கிருக்கோம்… அனைவருக்கும் பயனளிக்கும் மையம்…!!

வாணியம்பாடியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜனதாபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய  சித்த மருத்துவ முகாமிற்கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கினார். மேலும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பேசியபோது, தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோல் கொரோனா நிதிக்கான 2 ஆயிரம் ரூபாயை முதல் தவணையாக கொடுத்து வருகின்றார். இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களின் கஷ்டத்தை அறிந்து முதல்வர் செயல்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-வது முறை தொடங்கப்பட்டுள்ள இந்த சித்த மருத்துவ முகாமை  மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |