தெலுங்கானா மாநிலத்தில் குழந்தை பிறந்த ஐந்து நாளிலேயே தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால் குழந்தையுடன் கணவன் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் 20 வயது தொழிலாளி கிருஷ்ணா. இவரின் மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஐந்து நாளில் குழந்தையின் தாய்க்கு கொரோனா உறுதியான காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் வேறு எங்கும் செல்ல முடியாமலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் படிக்கட்டில் அவரின் கணவர் மனைவி வருகைக்காக காத்து கிடக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் மனைவி மீண்டும் குணமாகி வருவால் என்று நம்பிக்கையுடன் அவரது கணவன் குழந்தையுடன் காத்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது கிராமம் அங்கிருந்து 115 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அவரின் கிராமம் அதிக தூரம் என்பதால் அங்கு சென்று தினமும் வர முடியாது என்ற காரணத்தினால் அவர் அங்கேயே இருந்து வருகிறார். இதையடுத்து இவரின் கதையை கேட்டு தனியார் நிறுவனங்கள் சிலர் தனது சொந்த கிராமத்திற்கு அவரையும், அவரின் குழந்தையையும் கொண்டு சென்று விட்டு வந்தனர்.