சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் கொரோனா நிவாரண நிதி இதுவரை 1,800 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் இயங்கி வரும் மூன்று ரேஷன் கடைகளில் சுமார் 4,600 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி கடந்த இரண்டு தினங்களாக காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அரசு அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை முதல் கட்ட நிவாரண நிதி ரூ. 2 ஆயிரத்தை சுமார் 1,800 குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.
மேலும் பயனாளிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக அரசு நிவாரண நிதி பெற குடும்ப அட்டை போதுமானது என்று பயனாளி ஒருவர் கூறியுள்ளார். மேலும் யாரு வேண்டுமானாலும் பணம் பெற முடியும் விரல்ரேகை பதிவு தேவை இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.