சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்த 155 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. அந்த வகையில் 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி சப்-டிவிசன் பகுதியில் ஒரு கார் மற்றும் 44 இருசக்கர வாகனங்களும், சிவகங்கை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 44 இருசக்கர வாகனங்களும், தேவகோட்டை சப்-டிவிசன் பகுதியில் 35 இருசக்கர வாகனங்களும், திருப்பத்தூர் சப்-டிவிசனில் 14 இருசக்கர வாகனங்களும், மானாமதுரை சப்-டிவிசனில் 2 ஆட்டோ மற்றும் 25 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 155 பேரை காவல்துறையினர் கொரோனா ஊராடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த காரணத்திற்காக கைது செய்துள்ளனர்.