தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பல்வேறு இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தது. இருப்பினும் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்றார். பதவி ஏற்றதை அடுத்து தமிழக மக்களுக்கு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக 13 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிட்டார். அந்த குழுவில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெற்றிருப்பது நல்ல வரவேற்பு பெற்றது.
முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கடமைப்பட்டுள்ளோம். எடுத்தவுடன் ஆளும் அரசை குறை சொல்லக் கூடாது என்பதால் குறை சொல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.