Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலிக்கு ஆதரவாக ….மைக்கேல் வாகனை வெளுத்து வாங்கிய- பாகிஸ்தான் வீரர் …!!!

விராட் கோலியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ,மைக்கேல் வாகனுக்கு பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ,தற்போது வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டனான  விராட் கோலியை,  நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஒப்பிட்டு, வாகன்  தெரிவித்துள்ள கருத்திற்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில்   விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த  பேட்ஸ்மேனாக  விளங்குகிறார், என்று அவர் தெரிவித்திருந்தார்.

இவரின் கருத்திற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட்  பதிலடி கொடுத்துள்ளார். உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டை சேர்ந்தவர் விராட்கோலி .இதனால் அவருக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. அத்துடன் அவர்  மிகச்சிறந்த வீரர் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 70 சதங்களை அடித்து, சாதனை படைத்துள்ளார் என்றும் ,இந்த சாதனையை எந்த வீரரும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சர்வதேச போட்டியிலும் விராட் கோலி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் என்று  கூறினார் . ஆனால் முன்னாள் வீரராக இருந்த மைக்கல் வாகன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ,ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை என்று சல்மான் பட் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Categories

Tech |