Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும் அஸ்வதி மற்றும் அபிலேஷ் என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |