Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூதாடிய வாலிபர்கள்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் சூதாடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலிருக்கும் கோவில் மண்டபத்தில் வைத்து 4 நபர்கள் சூதாடியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை தெரிந்து கொண்ட 2 நபர்கள் தப்பியுள்ளனர். மேலும் 2 நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் காவல்துறையினரால் பிடிபட்ட 2 பேர் அதே பகுதியில் வசித்து வந்த பரமசிவம் மற்றும் சீனி பாண்டி என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 2 நபர்களையும் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |