Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வட கான்தோட்டம் பகுதியில் ராஜீவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது விவசாய தோட்டத்தில் இருக்கும் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ராஜீவ் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |