Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதே வேலைய தான் பண்றியா…? ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

பிரபல ரவுடி கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் கொத்தூர் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் அலசனதம் பகுதியில் வசிக்கும் மல்லேஷ் என்பவர்  கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து கத்திமுனையில் கிருஷ்ணமூர்த்தி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி மற்றும்  3,500 ரூபாய் ரொக்கம் போன்றவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மல்லேஷை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மல்லேஷ் மீது சூளகிரி, ராயக்கோட்டை, ஓசூர் டவுன் போன்ற காவல் நிலையங்களில் ஆள் கடத்தல் வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும்,  மல்லேஷின் பெயர் ஓசூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |