Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நாங்க அதை நம்ப மாட்டோம்” ஏரிக்கரையில் இருந்த சடலம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் கிராமத்தில் லட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக அவரை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் லட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கவுண்டனூர் கிராமத்திற்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்துள்ளனர். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் சிலர் லட்சுமி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும், இங்கு அவரது உடலை அடக்கம் செய்யக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து லட்சுமியின் உறவினர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை காண்பித்த பிறகும் பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பெனு கொண்டாபுரம் ஏரிக்கரையில் லட்சுமியின் உடலை வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் லட்சுமியின் உடலானது ஏரிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |