Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்ன நான் அடுத்த பொல்லார்ட்டா’ …? ‘இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்’…! ‘என்னோடபோகஸே வேற – ஷாருக் கான்’…!!!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தமிழக வீரரான ஷாருக் கான் , பொல்லார்ட் போல அதிரடியாக விளையாடுகிறார் என்று முன்னாள் வீரர்  சேவாக்  புகழ்ந்து பேசியுள்ளார்.

14ஆம் தேதி ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில் குறிப்பாக  தமிழக வீரரான ஷாருக் கான் , பஞ்சாப் கிங்ஸ் அணியின் இறுதி பேட்ஸ்மேனாக களமிறங்கி ,இறுதிக்கட்டத்தில் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவருடைய சிறப்பான ஆட்டத்தை பற்றி பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான கும்ப்ளே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் ஆகியோர் புகழ்ந்து பேசியுள்ளனர் .

இதில் முன்னாள் வீரர் ஷேவாக் இளம் வயதில் பொல்லார்ட் , எப்படி ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ, இதே போன்று தற்போது தமிழக வீரர் ஷாருக் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், என்று புகழ்ந்துள்ளார். இதுபற்றி ஷாருக் கான் கூறும்போது, பயிற்சியாளர் கும்ப்ளே மற்றும் ஜாம்பவானான ஷேவாக் ஆகியோரின் பாராட்டைப் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். இருந்தாலும் மிகப்பெரிய வீரனான பொல்லார்டுடன், என்னை ஒப்பிடுவது மிகப் பெரிய விஷயம். ஆனால் என்னுடைய கவனம் முழுவதும் எனக்கென்று, ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதில் தான் இருக்கிறது. அதோடு இப்போது தான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கி உள்ளதாகவும், இனிவரும் நாட்களில் எவ்வளவு சிறப்பாக செயல்படுத்த முடியுமோ, திட்டமிட்டு செயல்படுத்தி எனக்கென்று ஒரு தனி பெயரை சம்பாதிக்க இருப்பதாகவும் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |