தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு இ பதிவில் மாற்றம் அறிவித்துள்ளது. அதன்படி இ பதிவு இணையதளத்திலிருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் இறப்புக்கு மட்டுமே தற்போது இ-பதிவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-பதிவுக்கு www.eregister.tnega.org என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.