Categories
சினிமா தமிழ் சினிமா

OMG! மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய வந்த…. கணவரின் நிலை…. கண்ணீர் விடும் ரசிகர்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 38. இவருடைய மறைவிற்கு திரையுலகினர்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிந்துஜாவின் சடலம் மின் மயானத்திற்கு தகனம் செய்ய எடுத்து செல்லப்பட்டபோது, அவருடைய கணவர் அருண்ராஜா காமராஜ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதால், பிபிஇ சூட்டில் வந்திறங்கினார். இதை பார்த்த சிந்துஜாவின் உறவினர்கள் மற்றும் இவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் அவருடைய ரசிகர்களின் கண்ணிலும் கண்ணீர் வரவழைத்துள்ளது. இதையடுத்து அருண்ராஜா காமராஜ் விரைவில் நலம்பெற்று வர பிரார்த்திப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |