அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று குஜராத்தில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் கடலோரப் பகுதிகளில் வசித்த 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயலின் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories