Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கிராமப்புறங்களில்…. எமர்ஜன்ஸி கிட் வழங்க மத்திய அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிராம பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு எமர்ஜன்ஸி கிட் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாராசிட்டமால் 500 எம் ஜி, ஐவர் மெக்டின், இருமல் மருந்து, மருத்துவர்கள் பரிந்துரைத்த மல்டிவிட்டமின் மாத்திரை, விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ்கள், அவசரகால தொடர்பு எண்கள், டிஸ்சார்ஜ் வழி முறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

Categories

Tech |