காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86) கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மன்மோகன் சிங் போட்டியின்றி ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார். மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது அறிவின் களஞ்சியம், அவரது பணிக்கான அர்ப்பணிப்பு மற்றும் பல வருட அனுபவம் அனைவருக்கும் பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
We congratulate Former PM Dr. Manmohan Singh on being elected as a Rajya Sabha MP from Rajasthan. His repository of knowledge, dedication to his work & years of experience will benefit all. pic.twitter.com/V71T6gGZOi
— Congress (@INCIndia) August 19, 2019