அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்த நாளிலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இந்த வெயிலின் தாக்கத்தோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் திடீரென்று கனமான மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழையினால் சாலையின் ஓரங்களில் மழைநீர் வழிந்து ஓடியது. இதனால் வெயிலின் தாக்கம் சிறிது குறைந்து சில்லென்று காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.