Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதை ரெடி… காத்திருக்கும் பிரபல இயக்குனர்…!!!

நடிகர் ரஜினிக்கு கதை வைத்திருப்பதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் சூப்பர் ஹிட் அடித்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . மலையாளத்தில் வெளியான இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு பட அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து இவர் கடந்த வருடம் மலையாள நடிகர் பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் பாட்டு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அல்போன்ஸ் புத்திரன்

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா? என அல்போன்ஸ் புத்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் ‘ரஜினி சாருக்கு கதை வைத்திருக்கிறேன். அவரை சந்தித்து கதை கூற முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை அவரை சந்திக்க முடியவில்லை. நடிகர் ரஜினியை வைத்து நான் படம் இயக்க வேண்டும் என என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும்’ என கூறியுள்ளார். தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |