Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மேலும் கடும் முழு ஊரடங்கு… நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் மேலும் ஊரடங்கை கடுமையாக்குவது பற்றிய அரசு முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று முதல் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ – பதிவு கட்டாயம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது கொரோனா ஊரடங்கு கடுமையாக்குவது பற்றி அரசு முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தடுப்பு விதிகளை பின்பற்றி அகற்றவேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பது பற்றி திட்டங்களை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |