சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் 7.36 லட்சம் பணம் கொள்ளை போனதாக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறார். இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அதில் முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சைதாப்பேட்டை காவிரி நகர் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7.36 பணம் கொள்ளை போனதாக ரேஷன் கடை ஊழியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.