இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற மே 26-ஆம் தேதி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு பிறந்து முதல் சந்திர கிரகணம் இதுவாகும். மே 26 ஆம் தேதி புதன்கிழமை இந்த சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரைக்கும் இந்த சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. இது மிக நீண்ட சந்திர கிரகணம் எனவும் கூறப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நிகழ்வினை பார்க்கமுடியும். சூரியன்-பூமி- சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய ஒளி நிலவில் படாது. அதனையே நாம் சந்திரகிரகணம் என்று கூறுகிறோம் .சூரிய ஒளி பூமியின் மேல் சற்று சிதறியபடி நிலவில் விழுவதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சந்திரன் காட்சியளிக்கும். அதன் மேல் இருக்கும் தூசி துகள்கள் காரணமாக இந்த நிறம் தோன்றுவது உண்டு.
இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கத்திய நாடுகள், தெற்கு அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற பகுதிகளில் காண முடியும். இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் வரக்கூடும். ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படும். மேலும் சந்திர கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை சாதாரண கண்களால் நம்மால் பார்க்க முடியும்.