பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவிதா கவுடாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் கவிதா கவுடா . இதையடுத்து இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ஹேமா ராஜ்குமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கவிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கவிதா தன்னுடன் இணைந்து நடித்த சந்தன்குமார் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கவிதாவுக்கும் சந்தன்குமாருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இவர்களுக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.