நடிகர் தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டி இயக்குனர் ஆனந்த் எல் ராய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் கர்ணன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கர்ணன் படத்தை ஓடிடியில் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
OUTSTANDING & BRILLIANT…This is how you can describe this experience called #Karnan @mari_selvaraj What a storyteller 🙏 The way you painted ur thoughts on the celluloid. Take a bow!! @dhanushkraja You are a magician mere bhai ..u should have told me.I thought u r an actor.🧡 pic.twitter.com/f1sfRkfNbZ
— Aanand L Rai (@aanandlrai) May 17, 2021
அதில் ‘அற்புதம் மற்றும் புத்திசாலித்தனம்… இப்படி தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை விவரிக்க முடியும். இயக்குனர் மாரி செல்வராஜ் என்ன ஒரு அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார். தனுஷ் நான் உங்களை ஒரு நடிகர் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு மந்திரவாதி’ என பதிவிட்டுள்ளார் . தற்போது இந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அத்ரங்கி ரே படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.