நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரிழப்புகள் அதிகரிப்பால் மயாணங்களில் சடலங்கள் வரிசையாக காத்து கிடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாமாக முன்வந்து பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுக்கிறார். இந்தப் பெண்ணுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.