தமிழகத்தில் இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ -பதிவு இணையதள பக்கத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதனால் திருமணத்திற்காக இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலைப்படுகின்றனர்.