Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000 செலவழித்து… உயிருடன் இருக்கும் பொழுது இறுதிசடங்கு… இந்த பொண்ணுக்கு எப்படிப்பட்ட ஆசை பாருங்க…!!!

தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனது இறுதி சடங்கை காணவேண்டும் என்ற பேராசையில் இளம்பெண் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரிபியன் தீவில் உள்ள சான்டியாகோ என்ற நகரில் 59 வயதான அல்போன்சா என்ற இளம்பெண் தான் இறந்த பிறகு உறவினர்கள் எப்படி அழுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக உயிருடன் இருக்கும் போதே சொந்த செலவில் இறுதி சடங்கிற்கு என்னென்ன செய்வார்களோ அதை அனைத்தையும் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெள்ளை நிற ஆடையை உடுத்தி, மூக்கில் பஞ்சு வைத்து, சவப்பெட்டி ஒன்று ஆர்டர் செய்து அதில் அவரே படுத்துக்கொண்டு தனது இறுதி சடங்கிற்கான வேலையை செய்துள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் அனைவரும் வந்து கண்ணீர் விடுவதை பார்த்து ரசித்துள்ளார்.

இதற்காக அவர் இந்திய ரூபாயில் 52 ஆயிரம் செலவு செய்து இதை ஏற்பாடு செய்துள்ளார். இந்த இறுதி சடங்கு முடிந்த பின்னர் தனது ஆசையை நிறைவேற்ற உதவியாக இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் இறுதிச் சடங்கிற்கு வந்த அனைவருக்கும் விருந்து அளித்துள்ளார். நான் இறந்த பிறகு எப்படி இறுதி சடங்குகள் செய்கின்றனர், உறவினர்கள் எப்படித் துக்கப் படுகின்றனர் என்பதை காண வேண்டும் என்று ஆசைபட்டதாகவும், அதற்காக இப்படி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |